உள்ளூர் செய்திகள்
சென்சார் ஒலிபெருக்கி

காரமடையில் யானைகள் ஊருக்குள் வருவதை அறிய சென்சார் ஒலிபெருக்கி

Published On 2022-01-19 10:50 GMT   |   Update On 2022-01-19 10:50 GMT
யானைகள் ஊருக்குள் வருவதை அறிய புதிய முயற்சியாக சென்சார் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டுள்ளது.
கோவை:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட குரும்பனூர், கல்லாறு, நன்செய் கவுண்டன்புதூர் ஆகிய கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ளன. 

இந்த கிராமங்களுக்குள் காட்டு பன்றி, சிறுத்தை, மான், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் புகுந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. காட்டு யானைகள், விளை நிலங்களில் புகுந்து வாழை தென்னை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. 

இந்தநிலையில் கிராமங்களில் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இது குறித்து வனச்சரகர் பழனிராஜா கூறியதாவது:

காரமடை வனத்துறை சார்பில் இந்த கிராமங்களில் யானைகள் நுழைவதை முன் கூட்டியே தெரிவிக்கும் வகையில் சென்சார்  ஒலி பெருக்கி பொருத்தப்பட்டு உள்ளது.இதன் மூலம் யானைகள் நுழைவதை முன் கூட்டியே தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
Tags:    

Similar News