உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கோவையில் வாலிபர் தற்கொலை

Update: 2022-01-19 10:22 GMT
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்
கோவை:

கோவை உக்கடம் ஜி.எம்.நகர் அருகே உள்ள அற்புதம் நகரைச் சேர்ந்தவர் அகமது கபீர்(வயது35). இவர் மீது பெரியகடை வீதி போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 2 திருட்டு வழக்குகள், ஒரு அடிதடி வழக்கு, குனியமுத்தூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 4 வழிப்பறி வழக்குகள், வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் ஒரு வழிப்பறி வழக்கு என மொத்தம் 8 வழக்குகள் உள்ளன. இதுதவிர துடியலூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் கஞ்சா வழக்கம் உள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜெயிலில் இருந்து வெளியே வந்த இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை அவரது உறவினர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். 

சிகிச்சை முடிந்து அகமது கபீர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு திரும்பினார். வீட்டில் இருந்தவர் திடீரென வாழ்க்கையில் விரக்தியடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனை பார்த்த அவரது உறவினர்கள் இதுகுறித்து பெரியகடைவீதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவத்தை விரைந்து சென்று விசாரணை நடத்தினர் அப்போது அகமது கபீர் தற்கொலை செய்வதற்கு முன்பு கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர் அதில் நான் என்னுடைய குடும்பத்திற்கு பாரமாக இருக்க விரும்பவில்லை இதன் காரணமாக நான் தற்கொலை செய்து கொள்கிறேன் இவ்வாறு அவர் எழுதி இருந்தார் 

பின்னர் போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News