உள்ளூர் செய்திகள்
சுவாமி வீதி உலா வந்த காட்சி.

செங்கோட்டை கோவிலில் தைப்பூச விழா நிறைவு

Published On 2022-01-19 09:03 GMT   |   Update On 2022-01-19 09:03 GMT
செங்கோட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ குலசேகர நாத சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா பக்தர்கள் கூட்டம் இன்றி கடந்த 9-ந் தேதி தொடங்கி நேற்று வரை 10 நாட்கள் நடைபெற்றது.
செங்கோட்டை:

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையால் கோவில்களில் தைப்பூச விழா அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் படி நடைபெற்றது.

செங்கோட்டையில் பிரசித்திபெற்ற ஸ்ரீ குலசேகரநாத சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா பக்தர்கள் கூட்டம் இன்றி கடந்த 9-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.  

10 நாட்கள் நடைபெற்ற  விழாவில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், இரவில் சுவாமி-அம்பாள் உள்பிரகத்தில் உலா நிகழ்ச்சி நடைபெற்றது. 

முக்கிய நிகழ்ச்சியான  உச்சி கால அபிஷேகம், சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷகமும் நடந்தது. பகல் 11 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு சாயரட்சை, தொடர்ந்து சுவாமி அம்பாள் எழுந்தருளி உள்பிரகாரத்தில் உலா நடைபெற்றது. 

வழக்கமாக தைப்பூசத்திற்கு செங்கோட்டை சுற்று வட்டார பக்தர்கள் வருகை தருவார்கள். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக் கப்படவில்லை என்பதால் மிக எளிய முறையில் நடைபெற்றது. 

இதற்கான சிறப்பு பூஜைகளை கணேச பட்டர், ராஜா பட்டர் செய்திருந்தனர். கோவில் நுழைவு வாயிலில் நின்று பக்தர்கள் வழிபட்டு சென்றனர். 10 நாள் திருவிழா வைபோக நிகழ்ச்சிக்கு மண்டகபடிதாரர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
Tags:    

Similar News