உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

போலி டாக்டர்கள் அதிகரிப்பு

Published On 2022-01-19 08:26 GMT   |   Update On 2022-01-19 08:26 GMT
திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் போலி டாக்டர்கள் அதிகரிப்பு.
குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. பகல் நேரங்களில் கடுமையான வெப்பமும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடுமையான குளிரும் வாட்டி வதைக்கிறது.

இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சளி, காய்ச்சல், உடல் வலி, இருமல் போன்றவை ஏற்படுகின்றன. தற்போது கொரோனா பரவலும் அதிகரித்து வருவதால் இது போன்ற நோய்களுக்கு அரசு ஆஸ்பத்திரி அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்றால் அவர்களுக்கு முதல்கட்டமாக கொரோனா பரிசோதனை எடுக்கப்படுகிறது.

ஒரு வேளை தொற்று கண்டறியப்பட்டால் அவர் கள் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை எடுக்கும் நிலை உருவாகிறது. இதனால் கிராம புறத்தில் மருந்து கடைகளிலும் போலி டாக்டர்களிடமும் மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் அருகே உள்ள சாணார்பட்டி, கம்பிளியம்பட்டி, வி.எஸ்.கோட்டை, அதிகாரிப் பட்டி, வடமதுரை, அய்யலூர், உள்ளிட்ட கிராமங்களில் பள்ளிப்படிப்பை முடித்தவர்களும், சித்தா படித்தவர்களும் மருந்து கடை உரிமையாளர்களும் தற்போது டாக்டர்களாக மாறியுள்ளனர். அவர்கள் கொடுக்கும் மருந்துகள் உடனடி நிவாரணம் தருவதால் அதனை மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்கின்றனர்.

ஏற்கனவே இது போன்ற கிராமங்களில் போலி டாக்டர்கள் சிகிச்சை அளித்தது தொடர்பாக புகார் வரவே மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டு பலரை கைது செய்தனர். தற்போது அவர்கள் மட்டுமின்றி வேறு சிலரும் கிராமப்புற மக்களுக்கு சிகிசசை அளித்து வருகின்றனர்.

கிளினிக் சென்றால் கூடுதல் தொகை கொடுக்க வேண்டும். ஆனால் இவர்களிடம் சிகிச்சைக்கு ரூ.100 மற்றும் அதற்கு குறைவாக கொடுப்பதால் இது போன்ற மருத்துவர்களை மக்கள் தேடிச் செல்கின்றனர்.
பெரும் அசம்பாவிதம் நடப்பதற்குள் இது போன்ற போலி மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News