உள்ளூர் செய்திகள்
பேரிஜம் ஏரி

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

Published On 2022-01-19 08:18 GMT   |   Update On 2022-01-19 08:18 GMT
கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சுற்றுலா பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
கொடைக்கானல்:

மலைகளின் இளவரசி யான கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலமான பேரிஜம் ஏரி விளங்குகிறது. சுற்றுலா பயணிகள் பேரிஜம் ஏரிக்கு செல்ல வனத்துறையினரிடம் அனுமதி சீட்டு பெறவேண்டும். கொரோனா ஊரடங்கு காரணமாக பேரிஜம் ஏரி மூடப்பட்டது.

அதனை தொடர்ந்து வனவிலங்குகள் அச்சுறுத்தல் மற்றும் தொடர் மழை காரணமாக வனத்துறையினர் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனுமதி வழங்கப்படவில்லை. நீண்ட நாட்களாக பேரிஜம் ஏரிக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.

எனவே இங்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து கடந்த 4ம் தேதி பேரிஜம் ஏரியை சுற்றிப்பார்க்க வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள படுவதால் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பராமரிப்பு பணி காரணமாக தற்காலிகமாகவே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணி முடிவடைந் ததும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றனர்.
Tags:    

Similar News