உள்ளூர் செய்திகள்
உடைக்கப்பட்ட உண்டியல்

நாகர்கோவில் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் கொள்ளை

Published On 2022-01-19 08:12 GMT   |   Update On 2022-01-19 08:12 GMT
நாகர்கோவில் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் உடைத்து கொள்ளை அடிக்கப்பட்டது.
நாகர்கோவில்:

நாகர்கோவில் தக்கலை அருகே திருவிதாங்கோடு பகுதியில் புனித தோமையார் ஆலயம் உள்ளது. பழமையான இந்த ஆலயத்தில் வெள்ளி மற்றும் ஞாயிறு திருப்பலி நடைபெறுவது வழக்கம். ஊரடங்கு காரணமாக வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களில் திருப்பலி நடைபெறுவதில்லை.

இந்நிலையில் திங்கள் இரவு திருப்பலி முடிந்து மறுநாள் நேற்று அப்பகுதியில் ஒரு பக்தர் கோவிலுக்கு வரும் போது கோவில் முன்புறம் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே ஆலய பங்கு தந்தை அஜின் கோஷி ஜாணுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடம் வந்து பார்வையிட்ட பங்கு தந்தை உண்டியல் பணம் ரூ. 2000 திருட்டு போனதாக தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரை பெற்று கொண்ட சப் இன்ஸ்பெக்டர் அருளப்பன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே 2 மாதங்களுக்கு முன்பு கல்குறிச்சியில் கோவிலில் உண்டியல் திருட்டு போனநிலையில் இப்பகுதியில் மற்றொரு கோவிலில் திருட்டு போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News