உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.

கொச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கு 630 டன் உரம் வருகை

Published On 2022-01-19 08:00 GMT   |   Update On 2022-01-19 08:00 GMT
கொச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கு 630 டன் உரம் வந்தடைந்தது.
நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2-வது பருவ நெல் சாகுபடி பணிகள் முடிவடைந்து உள்ளது தற்போது பயிர்களுக்கு தேவையான உரத்தை விவசாயிகள் போட்டுவிடுகிறார்கள்.

பயிர் செழித்து வளருவதற்காக இந்த உரம் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான உரம் கொச்சியிலிருந்து நேற்று  நாகர்கோவிலுக்கு சரக்கு ரெயில் மூலம் வந்தது.

630 பாக்டம்பாஸ் உரம் நாகர்கோவில் ரயில் நிலையம்  வந்த நிலையில்  பின்னர் ரெயில் நிலையத்திலிருந்து உரம்  லாரிகளில் ஏற்றப்பட்டு மத்திய அரசு கிட்டங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து விவசாயத்திற்குத் தேவைக்கேற்ப வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News