உள்ளூர் செய்திகள்
கைது

மதுரை வண்டியூரில் கஞ்சா-ஆயுதங்களுடன் பதுங்கிய ரவுடிகள் கைது

Published On 2022-01-19 07:42 GMT   |   Update On 2022-01-19 07:42 GMT
மதுரை வண்டியூரில் கஞ்சா-ஆயுதங்களுடன் பதுங்கிய ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை வண்டியூர் மதுபான கூடம் அருகே கஞ்சா மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம கும்பல் பதுங்கி இருப்பதாக போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு தகவல் வந்தது.

இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார். இதன்படி மாநகர் வடக்கு துணை கமி‌ஷனர் ராஜசேகர் மேற் பார்வையில், அண்ணாநகர் உதவி கமி‌ஷனர் சூரக்குமார் ஆலோசனையின் பேரில், இன்ஸ்பெக்டர் சாதுரமேஷ் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். அங்கு மூங்கில் புதருக்குள் 5 பேர் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அவர்கள் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.

தனிப்படை போலீசார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 2 கிலோ 100 கிராம் கஞ்சா, 3 அரிவாள்கள், 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

5 பேரையும் தனிப்படை போலீசார் அண்ணாநகர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் எஸ்.புளியங்குளம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாட்டுக்கறி அருண் (வயது 29), யாகப்பா நகர் சித்தி விநாயகர் கோவில் தெரு பிரதாப் குமார் (31), அன்புநகர் வெற்றிவேல் முருகன் என்ற காட்டுப்பூச்சி (29), வண்டியூர் பாலாஜி நகர் மாரிமுத்து என்ற மண்டைமாரி (30), வலையங்குளம் பெருமாள் கோவில் தெரு ராம்குமார் (30) என்பது தெரியவந்தது.

அவர்கள் மீது மாநகரின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

வண்டியூர் மதுபானக் கூடத்துக்கு வருவோருக்கு இந்த கும்பல் கஞ்சா சப்ளை செய்து வந்தது. இது தவிர அவர்கள் சம்பவ இடத்தில் பதுங்கி இருந்து குற்றச் செயலில் ஈடுபட சதி திட்டம் தீட்டியதும் அம்பலமானது.

Tags:    

Similar News