உள்ளூர் செய்திகள்
டாக்டர்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் - நர்சுகள் உள்பட 22 பேருக்கு கொரோனா பாதிப்பு

Update: 2022-01-19 07:37 GMT
சேலம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகள் என ஷிப்ட் முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் 400-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

லேசான அறிகுறிகள் இருப்பவர்கள் வீட்டு தனிமையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

தடுப்பூசி போடாமல் பாதிக்கப்படுபவர்கள், பாதிப்பு அதிகமாக உள்ளவர்கள் மற்றும் இணை நோயுடன் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுவர்களுக்கு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சேலம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகள் என ஷிப்ட் முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்கள் ஒரு வாரம் பணிபுரிந்த பிறகு, பரிசோதனை செய்து கொள்வார்கள். இதில் பாதிப்பு இல்லாதவர்கள் மீண்டும் பணிக்கு திரும்புவார்கள்.

இந்த நிலையில், தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களில் 2 டாக்டர்கள், 20 நர்சுகள் என 22 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள். இதனால் ஆஸ்பத்திரியில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாமல் குறைவாகவே உள்ளது. ஒரு சிலருக்கு மட்டும் பாதிப்பு அதிகமாக உள்ளது. தற்போது அனைவரும் நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News