உள்ளூர் செய்திகள்
தக்காளி

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.10க்கு விற்பனை

Published On 2022-01-19 04:18 GMT   |   Update On 2022-01-19 04:18 GMT
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை கிடுகிடுவென சரிந்து 1 கிலோ ரூ.10க்கு விற்பனையானது.
ஒட்டன்சத்திரம்:

தென் தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தையான ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் தக்காளி, பீட்ரூட், முருங்கைக்காய், வெண்டைக்காய், சுரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.

இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக கேரளாவுக்கு 60 சதவீதம் காய்கறிகள் அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வரத்து குறைந்ததால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது. 1 கிலோ ரூ.100 வரை விற்பனையானது.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தக்காளி வாங்க தயக்கம் காட்டினர். மேலும் தொடர் மழை காரணமாக தக்காளி அழுகத் தொடங்கியது. இதனால் வரத்து பெருமளவு குறைந்தது. கடந்த மாதம் முழுவதும் ரூ.80க்கு மேல் விற்பனையானது. தற்போது மழை ஓய்ந்து விட்ட நிலையில் மீண்டும் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.

மார்க்கெட்டில் விலை கிடுகிடுவென குறைந்து 1 கிலோ தக்காளி ரூ.10க்கு விற்பனையானது. விலை அதிகரித்த போதும், குறைந்தபோதும் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கவில்லை. கரும்பு முருங்கை 1 கிலோ ரூ.120, செடி முருங்கை மற்றும் மர முருங்கை ரூ.95, நாசிக் முருங்கை ரூ.230, வெண்டைக்காய் ரூ.20, பீட்ரூட் ரூ.31, சுரைக்காய் ரூ.4, பீன்ஸ் ரூ.15, கத்தரிக்காய் 30 கிலோ கொண்ட பை ரூ.350 என்ற விலையில் விற்பனையானது.
Tags:    

Similar News