உள்ளூர் செய்திகள்
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி

தமிழகத்தில் புதிதாக 23,888 பேருக்கு கொரோனா பாதிப்பு- 29 பேர் உயிரிழப்பு

Update: 2022-01-18 14:10 GMT
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15,036 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று மாலை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,41,562 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 23,888  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்றைய பாதிப்பு 23,443 ஆக இருந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 87 ஆயிரத்து 254-ஆக அதிகரித்துள்ளது.  பாதிப்பு விகிதம் 16.7 சதவீதமாக உள்ளது.

சென்னையில் 8305 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டில் 2143 பேருக்கும், கோவையில் 2228 பேருக்கும், திருவள்ளூரில் 854 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 687 பேருக்கும், கன்னியாகுமரியில் 830 பேருக்கும், மதுரையில் 643 பேருக்கும், திருப்பூரில் 517 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 15,036 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 89 ஆயிரத்து 045-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 37,038 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,61,171 ஆக உயர்ந்துள்ளது.  
Tags:    

Similar News