உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

சேவல் சண்டை 6 பேர் கைது

Published On 2022-01-18 07:08 GMT   |   Update On 2022-01-18 07:08 GMT
கரூர் மாவட்டத்தில் தடையை மீறி சேவல் சண்டை நடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்:

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள தொப்பரப்பட்டி முட்புதர் பகுதியில் பணம் வைத்து பந்தயம் கட்டி சேவல் சண்டை நடத்தப்படுவதாக அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

மேற்கண்ட பகுதியில் போலீசார் நேற்று அப்பகுதியில் நடத்திய சோதனையில் சேவல் சண்டை நடத்தப்பட்டது தெரியவந்தது.

அங்கு சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த திண்டுக்கல் மாவட்டம் ஒலியக்கோட்டையைச் சேர்ந்த தங்கவேல் (54), செய்யப்பபகவுண்ட ன்புதூரை சேர்ந்த சிவராசன் (31), பெரிய தொப்பரப்பட்டியைச் சேர்ந்த சுப்ரமணி (47) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்

மேலும் அவர்களை கைது செய்து உயிரிழந்த நிலையில் 3 சேவல்கள், ரூ.1,000 ரொக்கப்பணம் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கரூர் மாவட்டம் தேவர்மலை அருகேயுள்ள குடிவெண்டை காளிஸ்வரர் கோயில் அருகே பணம் வைத்து பந்தயம் கட்டி சேவல் சண்டை நடத்தப்படுவதாக சிந்தாமணிப்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது.

உடனடியாக அங்கு சென்ற போலீசார் நடத்திய சோதனையில் அப்பகுதியில் சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த செம்பியநத்தத்தை சேர்ந்த பெரியசாமி (60), அவரது தம்பி பொன்னுசாமி (56), மந்திரிகோன்பட்டி பிச்சைமணி (31) ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்னர்.

மேலும் அவர்களை கைது செய்து உயிரிழந்த 2 சேவல்கள், ரூ.2,410 பணத்தை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கரூர் மாவட்டத்தில் சேவல் சண்டை நடத்துவதற்கு மதுரை ஐகோர்ட்டு கிளை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News