உள்ளூர் செய்திகள்
முசிறி அருகே மின்கம்பியில் உரசி தீப்பற்றிய வைக்கோலை தீயணைப்புத்துறையினர் தீயை அனைத்தபோது எடுத்த படம்.

வைகோல் லாரியில் பயங்கர தீ விபத்து

Update: 2022-01-18 07:03 GMT
திருச்சி அருகே வைக்கோல் ஏற்றி வந்த மினி லாரி மீது மின் கம்பி உரசி தீ விபத்து ஏற்பட்டது.
திருச்சி:-

திருச்சி மாவட்டம் முசிறி உமையாள்புரம் சத்திரத்திற்கு, கண்டியூர் பகுதியிலிருந்து சுமார் 20 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல் மினி லாரியில் ஏற்றி கொண்டுவரப்பட்டது.

உமையாள்புரம் சத்திரம் பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் துரை செல்வம் என்பவர் வீட்டில் இறக்கும் போது, தாழ்வான பகுதியில் சென்ற மின்கம்பியில் உராய்வு ஏற்பட்டது.

அப்போது எதிர்பாராதவிதமாக வைக்கேலில் மளமளவென தீ பற்றியது. உடனடியாக அப்பகுதி மக்கள் விரைந்து தீயணைப்புத் துறையினர்க்கு கொடுத்தனர். தகவலின்படி, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

அவர்கள் வைக்கோல் கட்டுகளில் பற்றி எரிந்த தீயை அணைத்து, வாகனத்தை மீட்டு பெரும் அசம்பாவிதம் நடக்காத வண்ணம் காத்தனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News