உள்ளூர் செய்திகள்
பூஜை நடந்த போது எடுத்த படம்

செங்கோட்டை கோவிலில் தைப்பூச திருவிழா

Update: 2022-01-16 06:33 GMT
செங்கோட்டை ஸ்ரீதர்மசம் வர்த்தினி அம்பாள் ஸமேத ஸ்ரீ குலசேகர நாதசுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நடந்து வருகிறது. கொரேனா காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
செங்கோட்டை:

செங்கோட்டை ஸ்ரீதர்மசம் வர்த்தினி அம்பாள் ஸமேத ஸ்ரீ குலசேகர நாதசுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா வானது கடந்த 9&ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடந்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், இரவில் சுவாமி அம்பாள் சப்பரத்தில் வீதிஉலா நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.

7&ம் திருநாள் விழாவில் சுவாமி அம்பாள் அலங்கரிக்கபட்ட கோ ரதத்தில் வீதியுலா விழாவானது கொரோனா தொற்று பரவல் காரணமாக எளிமையான முறையில் நடைபெற்றது.

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கபட்டதால்  பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
Tags:    

Similar News