உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை

Published On 2022-01-16 06:28 GMT   |   Update On 2022-01-16 06:28 GMT
தென்காசி மாவட்டத்தில் நேற்று மாலை திடீரென பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தது.
தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென வானத்தில் கருமேகக் கூட்டம் திரண்டது.

தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளான தென்காசி, ஆய்க்குடி, செங்கோட்டை பகுதிகளில் மழை பெய்தது.

மேலும் அணை பகுதிகளான கருப்பாநதி, அடவிநயினார், குண்டாறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. பாவூர்சத்திரம், கடையம், ஆலங்குளம், சங்கரன்கோவில் பகுதி களில் லேசான மழை பெய்தது.

இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக கருப்பாநதி அணை பகுதியில் 59 மில்லிமீட்டரும், தென்காசியில் 37.4 மில்லிமீட்டரும் மழை பெய்தது.  குண்டாறில் 13 மில்லிமீட்டரும், அடவிநயினாரில் 12 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அணைகளை பொறுத்த வரை 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையில் 66.50 அடியும், ராமநதியில் 57.25 அடியும், 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதியில் 62.67 அடியும் நீர் இருப்பு உள்ளது.

மிகச்சிறிய அணையான குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36 அடியை எட்டி தொடர்ந்து பல மாதங்களாக நிரம்பி வழிகிறது. அடவிநயினார் அணையில் 92.50 அடி நீர் இருப்பு உள்ளது.
Tags:    

Similar News