தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 410 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 410 பேருக்கு கொரோனா
பதிவு: ஜனவரி 15, 2022 15:21 IST
கோப்புப்படம்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் கடந்த 20 நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது.
தஞ்சை மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் 410 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 80-ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.
இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1011- ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே 76 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தற்போது 1399 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :