புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து பைக்கை திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.
அவினாசியில் மோட்டார் சைக்கிள் திருட்டு
பதிவு: ஜனவரி 12, 2022 15:02 IST
கோப்புபடம்
அவினாசி:
அவினாசி சாலையப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி ( வயது 52). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் கீழ் தளத்தில் நிறுத்தி இருந்தார்.
நேற்று அதிகாலை எழுந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை யாரோ திருடி சென்றுவிட்டனர். இது குறித்து அவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :