உள்ளூர் செய்திகள்
யானை

கடையத்தில் விவசாயிகளை அச்சுறுத்தும் யானை

Update: 2022-01-11 10:28 GMT
கடையம் ராமநதி அணையின் வடபுறம் ஒற்றை யானை ஒன்று நடமாடி வருகிறது. இந்த யானை விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறது.
கடையம்:

 தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ராமநதி அணையின் வடபுறம் கடவுகாடு பகுதி உள்ளது. இப்பகுதியில் யானை ஒன்று மலையிலிருந்து கீழ் இறங்கி பன்றிப்பாறை ஊத்து அருகே நடமாடியது. 

தகவலறிந்த வனத்துறையினர் அங்கு சென்று ஒற்றை யானையை காட்டுக்குள் விரட்டியடித்தனர். ஆனால்  யானை காட்டுக்குள் செல்லாமல் மீண்டும் அப்பகுதியிலேயே நடமாடுவதால் விவசாயிகள் அச்சமடைந்து உள்ளனர். 

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும் போது, கடவுகாடு பகுதிக்கு வடபுறம் மின்வேலி இல்லாத பகுதியிலிருந்து யானை கீழ் இறங்கி இருப்பதால் அப்பகுதி வழியாக விரட்டினால் தான் காட்டுக்குள் செல்லும்.

மேலும் வரும் நாட்களில் வனவிலங்கு களால் விவசாயிகளுக்கு அச்சுறுத் தல் இல்லாமல் இருப்பதற்கு குற்றாலம் வன பகுதி வரை மின் வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News