உள்ளூர் செய்திகள்
பாளை மகாராஜாநகரில் காய்கறி வாங்க திரண்ட பொதுமக்கள்.

நெல்லையில் காய்கறி விலை உயர்வு

Published On 2022-01-10 10:36 GMT   |   Update On 2022-01-10 10:36 GMT
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. இதனால் நெல்லையில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்படுகிறது.
நெல்லை:

கொரோனா தொற்று காரணமாக நேற்று முழு ஊரடங்கு முடிந்து இன்று காலை அனைத்து கடைகள் மற்றும் மார்க்கெட்டுகள் திறக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் காய்கறி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இன்று நெல்லை மாவட்டத்தில் உழவர் சந்தைகள் மற்றும் மார்க்கெட்களுக்கு புது காய்கறிகள் ஏராளமாக வந்துள்ளன.

அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் உழவர் சந்தைகளில் காய்கறி விலை வழக்கம் போல் குறைவாகவே உள்ளது.

1 கிலோ எடை உள்ள தக்காளி-ரூ.38, கத்தரி- ரூ.48, வெண்டை-ரூ.36. புடலை- ரூ.24, சுரைக்காய்- ரூ.12, பீர்க்கங்காய்- ரூ.30, பூசணிக்காய்&- ரூ.30, அவரை- ரூ.50, கொத்தவரை-ரூ.46, பாகற்காய் சிறியது- ரூ.80, பெரிய பாகற்காய்-ரூ.30, மிளகாய்- ரூ.86, சின்ன வெங்காயம்-ரூ. 60, பெரிய வெங்காயம்-ரூ.35, உருளை கிழங்கு- ரூ.26, கேரட்-ரூ.85, முட்டைகோஸ- ரூ.56, பீட்ருட்- ரூ.70, சேம்பு- ரூ.40, சேனை- ரூ.22, சிறுகிழங்கு- ரூ.55, கருணை கிழங்கு- ரூ.35 என்ற விலையில் உழவர் சந்தைகளில் விற்கப்படுகிறது.

ஆனால் பாளை மற்றும் நெல்லையில் உள்ள மார்க் கெட்டுகளில் காய்கறிகளின் விலை இதை விட கடுமையாக விலை உயர்ந்து உள்ளது.

பாளை மார்க்கெட்டில் இன்று 1 கிலோ எடையுள்ள தக்காளி- ரூ.40, கத்தரி- ரூ.60, வெண்டை-ரூ.60, புடலை- ரூ.40, பூசணிக்காய்- ரூ.50, பாகற்காய் சிறியது- ரூ.100, பெரியது- ரூ.60, மிளகாய்- ரூ.100, உருளைகிழங்கு- ரூ.40, கேரட்- ரூ.100, முட்டைகோஸ்- ரூ.70 பீட்ருட்- ரூ.100, சேம்பு- ரூ.60, சேனை- ரூ.40, சிறுகிழங்கு- ரூ.80, சீனிகிழங்கு- ரூ.30, கருணை கிழங்கு- ரூ.60 என உழவர் சந்தையை விட கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.
கரும்பு
நெல்லை மாவட்டத்தில் தற்போது ஏராளமான கரும்புகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 10 கரும்புகள் உள்ள ஒரு கட்டு ரூ.350&க்கு விற்கப்படுகிறது.

சில்லறைக்கு ஒரு கரும்பு வாங்கினால் ரூ.50 வரை விற்கப்படுகிறது.இதுபோல பனங்கிழங்கு 25 கிழங்குகள் உள்ள ஒரு கட்டு ரூ.100 முதல் ரூ.125 வரை விற்கப்படுகிறது. அவித்த பனங்கிழங்கு ஒரு கிழங்கு ரூ.7 வரை விற்கப்படு கிறது.

நேற்று முழு ஊரடங்கு என்பதால் இன்று மார்க்கெட் டுகளுக்கு வரும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கடை வீதிகளிலும் வழக்கத்தை விட கூட்டம் இன்று அதிகரித்து காணப்பட்டது.

தலைப் பொங் கல் கொண்டாட பொங்கப்படி வாங்க வந்தவர்கள் கூட்டமும் அதிகரித்து காணப்பட்டது. பெரும் பாலான கடைகளில் முக கவசம் அணிந்து, சமூக விலக லுடன் நின்று பொருட்கள் வாங்க வலியுறுத்தப் பட்டனர்.

இதனால் சில காய்கறி கடையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று காய்கறிகள் வாங்கினர்.
Tags:    

Similar News