உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஓட்டப்பிடாரத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

Update: 2022-01-10 10:24 GMT
ஓட்டப்பிடாரத்தில் அரசு சார்பில் வழங்கப்படும் விவசாய மின் இணைப்புகள் சம்பந்தமான கூட்டம் வருகிற 12-ந்தேதி நடக்கிறது.
ஓட்டப்பிடாரம்:

தமிழக முதல்-அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்த ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ்31.3.2013 வரை பதிவு செய்த சாதாரண வரிசை விண்ணப்பதாரர்கள் மற்றும் 2013-2014-ல் பதிவு செய்த விவசாயிகளுக்கு சுயநிதி திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் பணம் செலுத்த முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது. 

மேலும் 01.04.2014 முதல் 31.03.2018 வரை ரூ.500 பதிவு கட்டணம் செலுத்தி சுயநிதி திட்டத்தில் ரூ.50 ஆயிரம் பணம் செலுத்துவதற்கு சம்மதக் கடிதம் வழங்கியுள்ள விண்ணப்பதாரர்களுக்கும் மின் இனைப்பு வழங்கப்பட உள்ளது. 

மேலும் சிறப்பு திட்டமாக மேற்கண்ட ஆண்டுகளில் பதிவு செய்த விவசாயிகள் விரைந்து பயன்பெறும் வகையில் பெயர் மாற்றம், புல எண் மாற்றம் மற்றும்  போர் வேல் மாற்றம் தொடர்பான விண்ணப் பங்களை உடனடியாக பதிவு செய்து உரிய மாற்றம் செய்திட சிறப்பு முகாம் ஓட்டப்பிடாரம் மின்வாரிய அலுவலகத்தில் வைத்து வருகிற 12 தேதி காலை 10 மணி முதல் மதியம் 3மணி வரை தூத்துக்குடி நகர் கோட்ட பொறியாளர் (பொறுப்பு) ஜவஹர்முத்து தலைமையில் நடைபெறுகிறது. 

சிறப்பு முகாமில் நகர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து விவசாயிகளும் மேற்கண்ட ஆண்டுகளுக்குள் பதிவு செய்து அலுவலக கடிதம் கிடைக்கப்பெறாமல் இருந்தாலும் உரிய ஆவணங்கள் இருந்தால் அதனுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

இத்தகவலை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சித்திவிநாயகர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News