முக்கிய ரெயில் நிலையங்கள் முன்பு 100 அடி உயர கம்பம் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பறக்கும் வகையில் தேசியக்கொடியை ஏற்ற மத்தியஅரசு ஆணையிட்டது.
தஞ்சை ரெயில் நிலையம் முன்பு 100 அடி உயர கம்பத்தில் புதிய தேசியக்கொடி ஏற்றப்பட்டது
பதிவு: ஜனவரி 10, 2022 15:18 IST
புதிய தேசிய கொடி பொருத்தும் பணி.
தஞ்சாவூர்:
இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் உள்ள ரெயில் நிலையங்கள் முன்பு 100 அடி உயர கம்பம் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பறக்கும் வகையில் தேசியக்கொடியை ஏற்ற மத்தியஅரசு ஆணையிட்டது.
அதன்படி தஞ்சை ரெயில் நிலையம் முன்பு கடந்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி 100 அடி உயர கம்பத்தில் பெரிய அளவிலான தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
30 அடி நீளம், 20 அடி அகலம் கொண்ட தேசியக்கொடி 24 மணி நேரமும் பறந்து கொண்டிருந்தது. இரவில் மின்னொலியில் ஜொலித்தது. தஞ்சை நகரின் எங்கு நின்று பார்த்தாலும் தேசியக்கொடி தெரியும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேசியக்கொடியில் லேசான அளவுக்கு சேதம் ஏற்பட்டது. உடனடியாக அதனை மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று ரயில்வே அதிகாரிகள், பொறியாளர்கள் தேசியக் கொடியை பாதுகாப்பாக கீழே இறக்கினர்.
பின்னர் புதிய தேசிய கொடியை பொத்தானை அழுத்தி மின்சார எந்திரம் மூலம் ஏற்றினர். 8 நிமிடங்கள் வரை தேசியக்கொடி உச்சிக்கு செல்ல நேரம் எடுத்துக் கொண்டது.