உள்ளூர் செய்திகள்
தங்கம்

தங்கம் விலை நிலவரம்

Published On 2022-01-10 05:24 GMT   |   Update On 2022-01-10 05:24 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.35,776-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று கிராம் 4 ஆயிரத்து 492 ஆக விற்கப்பட்ட தங்கத்தின் விலை, இன்று 4 ஆயிரத்து 472 ஆக குறைந்துள்ளது. இதேபோல் பவுன் ரூ.35,936-ல் இருந்து ரூ.35,776 ஆக குறைந்துள்ளது. தங்கம் பவுனுக்கு ஒரே நாளில் ரூ.160 குறைந்துள்ளது.

வெள்ளி விலை கிராம் ரூ.64.60-ல் இருந்து ரூ.64.30 ஆகவும் கிலோ ரூ.64 ஆயிரத்து 600-ல் இருந்து ரூ.64 ஆயிரத்து 300 ஆக குறைந்துள்ளது.
Tags:    

Similar News