உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

தக்காளி விலை குறைவால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

Published On 2022-01-09 06:46 GMT   |   Update On 2022-01-09 06:46 GMT
வரும் நாட்களில் தக்காளி வரத்து மேலும் அதிகரிக்கும். எனவே பொங்கலுக்குப் பின் மேலும் விலை சரியும் வாய்ப்பு உள்ளது.
திருப்பூர்:

கடந்த புரட்டாசி பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி மழையால் அழிந்தது. 

இதனால் தக்காளி விலை வரலாறு காணாத அளவு உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனையானது. இதனால் பொதுமக்கள் தக்காளி வாங்க முடியாமல் தவித்து வந்தனர். 

விலை உயர்ந்த போதிலும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் பயன் அடைய முடியவில்லை. இந்நிலையில், கார்த்திகை பட்டத்தில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்தனர். 

அவை தற்போது காய்ப்புக்கு வரத்துவங்கியுள்ளது. வெளியூர் வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி விலை கிடுகிடுவென சரிந்துள்ளது. 

ஒரு வாரத்திற்கு முன் 13 கிலோ கொண்ட ஒரு டிப்பர் ரூ.800-க்கும், இரண்டு நாட்களுக்கு முன் ரூ.500-க்கும், தற்போது ரூ.350-க்கும் விலை போனது. 

இன்னும் 2 வாரத்தில் அறுவடை சீசன் களைகட்டும். வரும் நாட்களில் தக்காளி வரத்து மேலும் அதிகரிக்கும். 

எனவே பொங்கலுக்குப் பின் மேலும் விலை சரியும் வாய்ப்பு உள்ளது.
Tags:    

Similar News