உள்ளூர் செய்திகள்
.

பரமத்திவேலூரில் நிலக்கடலை விலை சரிவு

Update: 2022-01-08 10:12 GMT
பரமத்திவேலூர் பகுதியில் நிலக்கடலை விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளான கபிலர்மலை, பரமத்தி மற்றும் மோகனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் நிலக்கடலை செய்யப்பட்டுள்ளது.

 இப்பகுதிகளில் விளையும் நிலக்கடலையை உலர்த்தி பின்னர் வியாழக்கிழமை தோறும் நடைபெறும் பரமத்திவேலூரில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். 

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 2053 கிலோ நிலக்கடலையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.60.10 க்கும், குறைந்த பட்சமாக ரூ.54.10 க்கும், சராசரியாக ரூ.58.10&க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 312 க்கு வர்த்தகம் நடைபெற்றது. 

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 300 கிலோ மட்டுமே நிலக்கடலை ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.55.10 க்கும், குறைந்த பட்சமாக கிலோ ஒன்று ரூ.42.10 க்கும், சராசரியாக கிலோ ஒன்று ரூ.55.10 க்கும் ஏலம் போனது.மொத்தம் ரூ.16 ஆயிரத்து 530 க்கு வர்த்தகம் நடைபெற்றது. 

 நிலக்கடலை விலை சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News