உள்ளூர் செய்திகள்
மக்கள் நீதி மய்யம்

பொங்கல் நாளில் தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும்- மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

Published On 2022-01-08 07:26 GMT   |   Update On 2022-01-08 07:26 GMT
ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பால் தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு நாட்களிலும் தேர்வு இருக்கிறது. எனவே தேர்வர்களின் நலன் பாதுகாப்பினை மத்திய அரசு கருத்தில் கொண்டு தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும்.

சென்னை:

மக்கள் நீதி மய்யம் மாநில துணைத்தலைவர் தங்கவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

யூ.பி.எஸ்.சி. மெயின் தேர்வு திட்டமிட்டபடி ஜனவரி 7, 8, 9, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ் மக்களின் வாழ்வில் முக்கியமான பண்டிகை என்பதால், பணி நிமித்தமாக வெளி ஊர்களில் வசிப்பவர்கள் எல்லோரும் சொந்த ஊர்களுக்குச் சென்று பொங்கல் விழாவைக் கொண்டாடுவார்கள். உறவுகளும் உணர்வுகளும் வலுப்படும் இந்த நாட்களில் தேர்வு நடத்தப்படுவது தமிழர்களின் பண்பாட்டில் கைவைக்கும் செயலாகும்.

அத்துடன், ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பால் தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு நாட்களிலும் தேர்வு இருக்கிறது. எனவே தேர்வர்களின் நலன் பாதுகாப்பினை மத்திய அரசு கருத்தில் கொண்டு தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும்.

மத்திய அரசு தேர்வர் களின் பாதுகாப்பினை கணக் கில் கொண்டு யூ.பி.எஸ்.சி. மெயின் தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள் ளார்.

Tags:    

Similar News