உள்ளூர் செய்திகள்
கடை முன்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காட்சி.

நெல்லை மாநகராட்சி சார்பில் கடைகள் முன்பு ஸ்டிக்கர் ஒட்டும் பணி

Published On 2022-01-07 11:01 GMT   |   Update On 2022-01-07 11:01 GMT
நெல்லை மாநகர பகுதியில் தடுப்பூசி செலுத்தியதை குறிக்கும் வகையில் கடைகள் முன்பு ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடங்கியது.
நெல்லை:

நெல்லை மாநகர பகுதியில் செயல்படும் வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது.

நகர்நல அலுவலர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் தச்சை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையில் இன்று அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

அதன்படி வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்கள், டீக்கடைகள், ஓட்டல்கள், மளிகை கடைகள், ஜவுளி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது சம்பந்தப்பட்ட கடைகளில் ஊழியர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் அந்த கடைகளில் பச்சை வண்ண ஸ்டிக்கர் ஒட்டப் பட்டது. 

யாராவது ஒருவர் 2 தவணைகளும், அல்லது ஒரு தவணை மட்டும் போடாமல் இருந்தால் அந்த கடையின் முன்பு சிகப்பு வண்ண ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
Tags:    

Similar News