உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

ஆன்லைன் மூலம் செயற்கை நுண்ணறிவு கல்வி

Published On 2022-01-07 09:11 GMT   |   Update On 2022-01-07 09:11 GMT
பயிற்சி வகுப்பு தமிழ், ஆங்கிலம் உட்பட 11 இந்திய மொழிகளில் நடைபெறுகிறது.
உடுமலை:

மத்திய அரசின் கல்வி அமைச்சகம் வாயிலாக செயற்கை நுண்ணறிவு குறித்த ஆன்லைன் கல்வி செயல்படுத்தப்படுகிறது. பொது விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். இரு பிரிவுகளில் நடத்தப்படும் செயற்கை நுண்ணறிவு கற்றல் முறை 4 மணி நேரத்தில் நடத்தி முடிக்கப்படும்.அதேபோல் ஒவ்வொரு பிரிவின் முடிவிலும் எளிய முறையிலான வினாடி வினாக்கள் இடம்பெறும்.

இப்பயிற்சி வகுப்பு தமிழ், ஆங்கிலம் உட்பட 11 இந்திய மொழிகளில் நடைபெறுகிறது. ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் பயன்படுத்தி ‘ஆன்லைன்’ கற்றலில் பங்கேற்கலாம்.

பல்வேறு தொழில்துறைகளில் இந்த செயற்கை நுண்ணறிவு எவ்வாறு பயன்படுகிறது என்பது குறித்து முழுமையாக அறிந்து கொள்ள முடியும். இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க இரு வகையான ஆன்லைன் பேட்ஜ்கள் தரப்படுகிறது. 

பங்கேற்க விரும்புவோர், https://ai-for-all.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். தகவல் அறிய உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் ஒருங்கிணைப்பாளரை 8778201926 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  
Tags:    

Similar News