சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து, ஒரு சவரன் ரூ.35,888-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலையில் சில வாரங்களாக தொடர்ந்து உயர்வு காணப்பட்டு பவுன் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் விலையில் ஏற்ற-தாழ்வு இருந்து வந்த நிலையிலும் பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு மேலேயே இருந்தது. நேற்று பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.36 ஆயிரத்துக்கு விற்றது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.112 குறைந்து ரூ.35 ஆயிரத்து 888-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 486 ஆக உள்ளது.
தங்கத்தை போல வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.100 சரிந்து ரூ.64 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.50-க்கு விற்கிறது.