அவினாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று தீயை அணைத்தனர்.
திருப்பூர் அருகே டீக்கடையில் தீ விபத்து
பதிவு: ஜனவரி 06, 2022 16:36 IST
கோப்புப்படம்
திருப்பூர்:
திருப்பூர் அம்மாபாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் திருமுருகன்பூண்டியில் டீக்கடை வைத்துள்ளார். நேற்றிரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்றார். இந்தநிலையில் இன்று அதிகாலை அவரது கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அவினாசி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். டீக்கடையில் 4 கியாஸ் சிலிண்டர்கள் இருந்தன. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :