உள்ளூர் செய்திகள்
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிகள் நடைபெறுவதை கலெக்டர் வினீத் ஆய்வு செய்த காட்சி

குண்டடம் ஊராட்சி பகுதியில் வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ஆய்வு

Published On 2022-01-06 10:49 GMT   |   Update On 2022-01-06 10:49 GMT
பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
குண்டடம்:

குண்டடம் ஊராட்சி ஒன்றியம் நந்தவனம்பாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.3.05 லட்சம் மதிப்பில் விவசாயி தோட்டத்தில் மண்வரப்பு அமைக்கும் பணி, ரூ.3.69 லட்சம் மதிப்பில் கான்கீரிட் சாலை அமைக்கும் பணி, காணிக்கம்பட்டியில் ரூ.5.50 லட்சம் மதிப்பில் கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணி உள்பட மொத்தம் ரூ. 28.09 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் எஸ்.வினீத் ஆய்வு செய்தார் . 

அப்போது பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

இந்த ஆய்வின்போது குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அய்யாசாமி, குருவம்மாள், செயற்பொறியாளர் சீனிவாசபிரபு, உதவி பொறியாளர்கள் கார்த்திக்ராஜா, லோகேஷ்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News