உள்ளூர் செய்திகள்
சமயபுரம் மாரியம்மன் கோவில்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.60 லட்சம் காணிக்கை வசூல்

Published On 2022-01-06 05:07 GMT   |   Update On 2022-01-06 05:07 GMT
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 2-வது நாளாக எண்ணப்பட்டது. இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.59 லட்சத்து 32 ஆயிரத்து 318 ரொக்கமும், 583 கிராம் தங்கமும் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்றுமுன்தினம் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில், காணிக்கையாக ரூ.1 கோடியே 7 லட்சத்து, 74 ஆயிரத்து 851 ரொக்கமும், 2 கிலோ 520 கிராம் தங்கமும், 4 கிலோ 510 கிராம் வெள்ளியும், அயல்நாட்டு பணம் 114- ம் கிடைத்தது. இந்த நிலையில் சில உண்டியல்களின் காணிக்கை எண்ணப்படாமல் இருந்தது. அவைகள் 2-வது நாளாக நேற்று எண்ணப்பட்டன.

இதில், காணிக்கையாக ரூ.59 லட்சத்து 32 ஆயிரத்து 318 ரொக்கமும், 583 கிராம் தங்கமும், 1 கிலோ 50 கிராம் வெள்ளியும், அயல்நாட்டு பணம் 32- ம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவில் இணைஆணையர் செல்வராஜ் (கூடுதல் பொறுப்பு), இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News