உள்ளூர் செய்திகள்
ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் போலீசாரிடம் ராஜேந்திர பாலாஜி ஒப்படைப்பு

Published On 2022-01-05 14:35 GMT   |   Update On 2022-01-05 14:35 GMT
முன்ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர இருந்த நிலையில், அதற்குள் தனிப்படை போலீசார் ராஜேந்திர பாலாஜியை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
சென்னை:

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். கடந்த 20 நாட்களாக தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் இன்று கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் கைது செய்தனர்.  

ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி புகார் தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 15-ந்தேதி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க அவர் முன்ஜாமின் மனுக்களை தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுக்கள் கீழ் கோர்ட்டிலும், ஐகோர்ட்டிலும் தள்ளுபடி ஆனது. 

இதையடுத்து ராஜேந்திர பாலாஜி சுப்ரீம் கோர்ட்டை நாடினார். முன்ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வர இருந்த நிலையில், அதற்குள் தனிப்படை போலீசார் ராஜேந்திர பாலாஜியை சுற்றிவளைத்து கைது செய்துவிட்டனர். இதேபோல் ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்த பாஜக நிர்வாகி உள்பட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி கர்நாடகத்தில் இருந்து இன்று இரவு தமிழகத்துக்கு அழைத்துவரப்பட்டார். பின்னர் அவர் விருதுநகர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
Tags:    

Similar News