உள்ளூர் செய்திகள்
தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு புதுச்சேரி அரசு எச்சரிக்கை

கொரோனா தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு - புதுச்சேரி சுகாதாரத்துறை உத்தரவு

Published On 2022-01-03 18:24 GMT   |   Update On 2022-01-03 18:24 GMT
ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியதை அரசுத்துறைகளின் செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை சார்பு செயலர் புனிதமேரி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக அரசு அலுவலகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன. அதன்படி புதுச்சேரி அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் இல்லாமல் விடுப்பு வழங்க வேண்டும். புதுச்சேரி அரசு துறை செயலர்கள், துறைத்தலைவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும்.

அதுகுறித்த அறிக்கையை வருகிற 7-ந் தேதிக்குள் தலைமை செயலகத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அனைத்து அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


Tags:    

Similar News