உள்ளூர் செய்திகள்
hotel

திருச்சியில் புதிய கொரோனா கட்டுப்பாடுகளால் நெருக்கடியில் ஓட்டல் தொழில்

Published On 2022-01-03 10:41 GMT   |   Update On 2022-01-03 10:41 GMT
தமிழக அரசு விதித்துள்ள திருச்சியில் உள்ள ஓட்டல்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளகொரோனா கட்டுப்பாடுகளால் து.
திருச்சி:கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் பரவல் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பல மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் பாதிப்பு 4 மடங்காக உயர்ந்துள்ளது. கொரோனாவின் 3&வது அலை தொடங்கிவிட்டதாக    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று எச்சரிக்கை விடுத்தா£ர். 
இதற்கிடையே இரு தினங்களுக்கு முன்பு ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், பேக்கரிகள் மற்றும் தியேட்டர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நெருக்கடிக்கு     தள்ளப்பட்டுள்ளனர். 
கடந்த 2020, 2021&ல் கொரோனா ஊரடங்கில் ரெஸ்டாரண்டுகள் மற்றும் உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.   2020&ல் பெரும்பாலான ரெஸ்டாரண்டுகள் 6 மாதங்கள் மூடப்பட்டு இருந்தன. 2021&லும் அவர்களால் 3 மாதங்கள் ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளை முழுமையாக திறக்க முடியவில்லை. 
இதையடுத்து  ஒரு  சில ஓட்டல்களில் பார்சல் சேவையை தொடங்கினர். ஆனாலும் விற்பனை மந்தமாக இருந்ததால்   ஷட்டரை இழுத்து பூட்டிவிட்டு வீட்டில் முடங்கினர். இதனால் கடை வாடகை, மின் கட்டணம் செலுத்த இயலாமல் அவதிக்குள்ளாகினர். பின்னர் ஒரு வழியாக கொரோனா கட்டுக்குள் வந்ததையடுத்து கடந்த அக்டோபர் முதல் ஓட்டல்  மற்றும் ரெஸ்டாரண்டுகள் முழுமையாக இயங்க தொடங்கின. இதனால் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். வியாபாரமும் சூடுபிடித்தது. 
இந்தநிலையில் மீண்டும் தற்போது அமலுக்கு வந்துள்ள  புதிய  கட்டுப்பாடுகளால்  தொழில்  நெருக்கடி ஏற்பட்டுள்ளது. திருச்சி மாநகரை பொறுத்தமட்டில் சத்திரம், மத்திய பஸ் நிலையம், ஸ்ரீரங்கம், தில்லை நகர், உறையூர் பகுதிகளில் உள்ள ரெஸ்டாரண்டுகள் ஓட்டல்களில் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஒரு டைனிங் டேபிளில் முன்பு 4  நாற்காலிகள் போடப்பட்டன. இப்போது 2 நாற்காலிகள் மட்டுமே உள்ளன. 
இதுபற்றி சத்திரத்தை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கூறும்போது, கொரோனா ஊரடங்கு மற்றும்   கட்டுப்பாடுகளால் 2020 மார்ச் மாதத்தில் இருந்து சுதந்திரமாக தொழில் செய்ய முடியவில்லை. இழந்த வியாபாரத்தை இன்று வரை பிடிக்க இயலவில்லை. இருப்பினும் அரசின் கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடித்தே ஆக வேண்டும். புதிய கட்டுப்பாடுகளால் மீண்டும் ஓட்டல் தொழில் கடுமையாக பாதிக்கும் என்றார்.
Tags:    

Similar News