உள்ளூர் செய்திகள்
முக கவசம்

மாஸ்க் அணியாமல் சுற்றுபவர்களை பிடிக்க போலீஸ் படை தீவிரம்

Published On 2022-01-03 09:38 GMT   |   Update On 2022-01-03 09:38 GMT
வணிக வளாகங்கள், ஜவுளி கடைகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களிலும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? என்பதையும் அதிகாரிகள் கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.
சென்னை:

கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி சென்னையில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொது இடங்களில் கொரோனா அச்சமின்றி முக கவசம் அணியாமல் சுற்றித்திரியும் பொதுமக்கள், சமூக இடைவெளியையும் பின்பற்றுவதில்லை. இதனால் நோய் பரவல் மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு சென்னை மாநகர போலீசார் மாநகராட்சியுடன் இணைந்து அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளனர். இதற்காக சென்னை மாநகர் நோய் தடுப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த குழுவினர் பொது இடங்களில் கண்காணித்து முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். இதற்காக சென்னையில் போலீஸ் படை களம் இறங்கியுள்ளது.

வணிக வளாகங்கள், ஜவுளி கடைகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களிலும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? என்பதையும் அதிகாரிகள் கண்காணிக்க தொடங்கியுள்ளனர். கடைகளில் திடீரென புகுந்து ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

அப்போது சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாமல் இருந்தால் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News