உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சென்னையில் மழை வெள்ளத்தை தடுப்பது எப்படி?: முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்த வல்லுனர் குழு

Published On 2022-01-03 08:01 GMT   |   Update On 2022-01-03 10:12 GMT
சென்னை புறநகர் பகுதியில் வடிகால் கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவினர் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னையில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள்.

இதையடுத்து மழை வெள்ள சேதத்தை தடுப்பது எப்படி? என்பது குறித்து ஆராய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் வல்லுனர் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தி தீவிரமாக ஆராய்ந்து இடைக்கால அறிக்கை தயாரித்தனர்.



இந்த அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வல்லுனர் குழுவினர் இன்று வழங்கினர். அதில், “மழை வெள்ளத்தை தடுக்க தற்காலிகமாக செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், நிரந்தரமாக செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும் சென்னை புறநகர் பகுதியில் வடிகால் கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வடிகால்களை அகலப்படுத்தி ஆழப்படுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு யோசனைகள் தெரிவிக்கப்பட்டு இருந்தன.

Tags:    

Similar News