பல்லடம் தாலுகாவில் இருந்த கார்த்திக் திருப்பூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருப்பூரில் வருவாய் ஆய்வாளர்கள் இடமாற்றம்
பதிவு: ஜனவரி 03, 2022 12:07 IST
கோப்புபடம்
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட வருவாய் அலகில் 4 முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் ஆர்.டி.ஓ., அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் கருணாநிதி, பொங்கலூர் நில வருவாய் ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.
திருப்பூர் வடக்கு தாலுகா முதுநிலை வருவாய் ஆய்வாளர் இளையராஜா, ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பல்லடம் தாலுகாவில் இருந்த கார்த்திக் திருப்பூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கும், உடுமலை தாலுகா, குடிமைப்பொருள் முதுநிலை வருவாய் ஆய்வாளர் கனகராஜ், திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பணி மாறுதலை தவிர்க்கும் வகையில் விடுப்பில் சென்றாலோ, புதிய பணியிடத்தில் சேராமல் தாமதம் செய்தாலோ தமிழ்நாடு குடிமைப் பணிகள் விதிகளின் படி மேல்நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
Related Tags :