உள்ளூர் செய்திகள்
ரெயில்

சபரிமலை சிறப்பு ரெயில்கள் நிற்காததால் திருப்பூர் பக்தர்கள் கவலை

Published On 2022-01-03 04:28 GMT   |   Update On 2022-01-03 04:28 GMT
வடமாநிலத்தில் இருந்து ரேணிகுண்டா வழியாக காட்பாடி வரும் ரெயில்கள் சேலம், ஈரோட்டில் நின்று நேரடியாக கோவைக்கு செல்கிறது.
திருப்பூர்:

சபரிமலை சிறப்பு ரெயில்கள் திருப்பூரில் நின்று செல்லாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் அய்யப்ப பக்தர்கள் கவலையடைந்துள்ளனர். நேற்று முதல் கச்சிக்குடா-கொல்லம், வருகிற 7, 14-ந் தேதி நர்சாபூர்-கொல்லம் இடையே 2  சிறப்பு ரெயில்கள் இயங்கும்.

மறுமார்க்கமாக 4-ந்தேதி கொல்லம் - கச்சிக்குடா, 8, 15ந்தேதி கொல்லம்- நர்சாபூர் இடையே இரு சிறப்பு ரெயில்கள் இயங்கும் என தெற்கு ரெயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.

வடமாநிலத்தில் இருந்து ரேணிகுண்டா வழியாக காட்பாடி வரும் இந்த ரெயில்கள் சேலம், ஈரோட்டில் நின்று நேரடியாக கோவைக்கு செல்கிறது. இந்த4  ரெயில்களும் திருப்பூரில் நிற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு அறிவிக்கப்பட்டுள்ள 5 ரெயில்கள் திருப்பூரில் நிற்காமல் சென்று வருகிறது. திருப்பூர் ரெயில் நிலைய அதிகாரிகள் கூறுகையில்,

சென்னை, திருவனந்தபுரம் கோட்ட அலுவலகங்கள் முடிவு செய்து சிறப்பு ரெயில் அறிவிப்பை வெளியிடுகின்றன. மாற்று ரெயில்களில் பயணிக்க அறிவுரை வழங்குகிறோம் என்றனர்.
Tags:    

Similar News