உள்ளூர் செய்திகள்
ஜாண்சன்

நாகர்கோவில் அருகே மோசமான சாலையால் விபத்தில் சிக்கி பாரதிய ஜனதா செயலாளர் மரணம்

Update: 2022-01-02 10:53 GMT
நாகர்கோவில், தக்கலை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பாரதிய ஜனதா செயலாளர் மோசமான சாலையால் விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
தக்கலை:

தக்கலை அருகே பிலாங் காலை வெட்டு காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஜாண்சன் (வயது61) இவர் தக்கலை ஒன்றிய இந்து முன்னணி செயலாளராக இருந்து வந்தார்.

இவர் நேற்று மதியம் கட்சி பணிக்காக தக்கலைக்கு வந்து விட்டு வீட்டுக்கு செல்ல மோட்டார் சைக்கிளில் தக்கலை அருகே பனவிளை பகுதியில் வரும் போது எதிரே வந்த பஸ்ஸுக்கு இடம் கொடுத்தார்.அப்போது சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது பின்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத் திரிக்கு  கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை இறந்து விட்டார். 

இதுகுறித்து அவரது மகன் பாரத் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் தக்கலை இன்ஸ்பெக்டர் சுதேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Tags:    

Similar News