உள்ளூர் செய்திகள்
திருப்பூர் மாநகராட்சி

நிலுவை வாடகை செலுத்தாவிட்டால் கடைகள் மறுஏலம்- திருப்பூர் மாநகராட்சி எச்சரிக்கை

Published On 2022-01-02 08:25 GMT   |   Update On 2022-01-02 08:25 GMT
மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ,வாடகை நிலுவையுள்ள கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்கள் நகரில் பல பகுதிகளில் உள்ளது.குமரன் வணிக வளாகம், வாரச் சந்தை வளாகம், மாட்டுக் கொட்டகை வளாகம், அனுப்பர்பாளையம், ரெயில் நிலையம், புது பஸ் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் இவை உள்ளன. இவற்றில் 188 கடைகளுக்கு நீண்ட நாளாக வாடகை செலுத்தாமல் கடைக்காரர்கள் நிலுவை வைத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக முனைப்புடன் நடந்த வசூலில் ரூ.3.80 லட்சம்  வசூலானது. இன்னும் ஏறத்தாழ ஒரு கோடி ரூபாய் வாடகை நிலுவை உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ,வாடகை நிலுவையுள்ள கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

உடனடியாக நிலுவை வாடகை செலுத்தாவிட்டால் கடைகள் கையகப்படுத்தி, டிபாசிட் தொகை பறிமுதல் செய்வதுடன், கடைகள் மறு ஏலத்தில் விடப்படும் எனவும், வாடகை நிலுவை வைத்துள்ளோர் அதில் பங்கேற்க இயலாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News