உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பணி நிரந்தரம்- பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

Update: 2022-01-02 08:05 GMT
தொகுப்பூதியத்தில் பணியாற்றிய தொழில் கல்வி ஆசிரியர்கள், நிரந்தரம் செய்ததை போலவே பகுதி நேர ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்:

தமிழக அரசு பள்ளிகளில் 2012ம் ஆண்டு 16 ஆயிரத்து549 பகுதி நேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி, கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்வியல் திறன் பாடங்களில் ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணி அமர்த்தப்பட்டு 10 கல்வி ஆண்டுகள் கடந்து விட்டன.

தற்போது  12 ஆயிரத்து, 483 பேர் ரூ.10ஆயிரம் தொகுப்பூதியம் பெற்று வருகின்றனர். பகுதி நேரமாக அறிவிக்கப்பட்ட போதும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் மற்றும் பற்றாக்குறை காரணமாக கற்பித்தல் மற்றும் அலுவலக பணிகளுக்கு இந்த ஆசிரியர்கள்  பெரிதும் பயன்படுத்தப்படுகின்றனர்.

இருப்பினும் குறைந்தபட்சம் ஊதியமே வழங்கப்படுகிறது. தொகுப்பூதியத்தில் பணியாற்றிய தொழில் கல்வி ஆசிரியர்கள், நிரந்தரம் செய்ததை போலவே பகுதி நேர ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், பட்ஜெட் அறிக்கையில் எதிர்பார்த்தோம். பணி நிரந்தரம் செய்வோம் என பள்ளிக்கல்வி அமைச்சரும் பேட்டியில் கூறியுள்ளார். பணிநிரந்தரம் செய்வதற்கான அரசாணையை வெளியிட்டு 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்க வேண்டுகிறோம் என்றார்
Tags:    

Similar News