உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் உள்ள ஓட்டலில் 50 சதவீதம் பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

திருப்பூர் ஓட்டல்கள்- தியேட்டர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதி

Published On 2022-01-01 13:14 GMT   |   Update On 2022-01-01 13:14 GMT
திருப்பூர் ஓட்டல்களில் ஏற்கனவே போடப்பட்டிருந்த சேர், டேபிள்கள் அகற்றப்பட்டுள்ளன.
திருப்பூர்:

கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் ஒமைக்ரான் தாக்கம் காரணமாக கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது. மத்திய அரசின்  அறிவிக்கையின்படி கொரோனா நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் நோயை கருத்தில் கொண்டும் மற்றும் பொதுமக்கள் நலன் கருதியும் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 10-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த கட்டுப்பாடுகள் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது. திருப்பூர் மாவட்டத்திலும்  நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து திருப்பூர் ஓட்டல்களில் ஏற்கனவே போடப்பட்டிருந்த சேர், டேபிள்கள் அகற்றப்பட்டுள்ளன. பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது. 

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த வும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்க ளுக்கு மிகாமல் செயல்படுவதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50 சதவீதவாடிக்கையாளர்களுடன் செயல்பட வேண்டும். பொது போக்குவரத்து பஸ்களில் உள்ள இருக்கைகளுக்கு மிகாமல் பயணிகள் பயணிக்க வேண்டும்.



தியேட்டர்கள் உள்ளிட்ட அனைத்து அரங்கங்களிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 சதவீதம் பார்வையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டு இருந்தது. அந்த உத்தரவுகளின்படி திருப்பூரில் ஓட்டல்கள், தியேட்டர்கள் இயங்க தொடங்கி உள்ளன.

உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 50 சத வீதம் பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது.  அழகு நிலையங்கள், சலூன்கள் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல் பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் புதிய கட்டுப்பாடுகள் எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகிறது என்று மாவட்டம்  முழுவதும்  ஓட்டல்கள்,  தியேட்டர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில்  ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News