உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

புத்தாண்டு கொண்டாட்டம்- ரூ.147 கோடிக்கு மதுபானம் விற்பனை

Update: 2022-01-01 11:02 GMT
புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் ரூ.147.69 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது.
சென்னை:

பண்டிகை காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் முன்னதாகவே குடிமகன்கள் டாஸ்மாக் கடையில் குவிந்து தங்களுக்கு வேண்டிய மது வகைகளை அள்ளிச் செல்வார்கள். இதனால் விசே‌ஷ காலங்களில் டாஸ்மாக் விற்பனை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் ரூ.147.69 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது.

அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.41.45 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.26 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.25 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.27 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.26 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது.
Tags:    

Similar News