2021-ம் ஆண்டின் கடைசி பிரதோஷமான நேற்று நந்திஎம்பெருமானுக்கு 12 வகையான அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கொரோனா தொற்று பரவிய பின்னர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் வருவதில்லை. தஞ்சை பெரியகோவிலில் பிரதோஷ வழிபாட்டின் போது பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள். அதுவும் சனிப்பிரதோஷத்தன்று வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்த ஆண்டின் (2021) கடைசி நாளான நேற்றுமாலை பிரதோஷம் நடைபெற்றது. அப்போது நந்திஎம்பெருமானுக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர், இளநீர், வில்வம்இலை உள்ளிட்ட 12 வகையான மங்கல பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சை பெரியகோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் நேற்று வந்திருந்தனர். குறிப்பாக ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்லக்கூடிய செவ்வாடை பக்தர்கள் அதிகஅளவில் வந்திருந்தனர். திருப்பூர், உளூந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த பெண் பக்தர்கள் நந்திஎம்பெருமான் சிலை முன்பு கும்மியடித்து வழிபாடு செய்தனர்.