திங்கட்கிழமை முதல் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர். மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் 76 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
சென்னையில் 10 பெண்கள் உட்பட 34 மாணவர்கள் கொரோனா பராமரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 76 புதிய ஒமைக்ரைன் வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இது சமூக பரவலுக்கான அறிகுறியாகும். ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் நான்கு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பினர் என்பது எங்களுக்கு கிடைத்துள்ள திருப்தி அளிக்கும் செய்தி. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த ஓமிக்ரான் பாதிப்பு 120 ஆக உள்ளது, அதில் 66 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.