உள்ளூர் செய்திகள்
ஆளுநரிடம் மனு அளித்த அதிமுக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்கள்

திமுக ஆட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் - ஆளுநரை சந்தித்து மனு அளித்த அதிமுக

Published On 2021-12-31 13:36 GMT   |   Update On 2021-12-31 13:36 GMT
திமுக அரசுக்கு எதிராக பேசுவோர் மீது பொய் வழக்கு போடப்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார்.
சென்னை:

அதிமுக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்களான, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என். தளவாய்சுந்தரம், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம், கழக அமைப்புச் செயலாளர் மனோஜ் பாண்டியன், கழக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் இன்பதுரை, கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாபு முருகவேல் ஆகியோர், இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தனர்.

அப்போது, திமுக ஆட்சியில் நடைபெற்று வரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, மகளிர் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், லாட்டரி-சூதாட்டம், போதைப் பொருட்கள் விற்பனை, லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிகார துஷ்பிரயோகம், ஆயுள் தண்டனைக் கைதிகளின் முன்விடுதலைக்காக அமைக்கப்பட்டுள்ள ஆணையம், அரசு அதிகாரிகளின் தற்கொலை மற்றும் ஆளும் கட்சியினரின் தலையீடுகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் அடங்கிய மனுவினை வழங்கினார்கள்.

பின்னர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆளுநரிடம் மனு அளித்துள்ளதாக சி.வி.சண்முகம் தெரிவித்தார். திமுக அரசுக்கு எதிராக பேசுவோர் மீது பொய் வழக்கு போடப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
Tags:    

Similar News