பெற்றோரிடமிருந்து பாதுகாப்பு வழங்க கோரி முசிறி காவல் நிலையத்தில் திருமணம் செய்த காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.
திருமணம் செய்த காதல் ஜோடி முசிறி காவல் நிலையத்தில் தஞ்சம்
பதிவு: டிசம்பர் 31, 2021 16:01 IST
திருமணம் செய்த காதல் ஜோடி முசிறி காவல் நிலையத்தில் தஞ்சம்
முசிறி:
முசிறியை அடுத்த சூரம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் விஜயராஜ் (வயது27). பெயிண்டரான இவருக்கு, தர்மபுரி மாவட்டம் அதிகாரிபட்டியை சேர்ந்த குப்புசாமி மகள் சந்தியாவுடன் (20) பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிசெய்தனர்.
அதன்படி வீட்டைவிட்டு வெளியேறி, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் விஜயராஜ் சூரம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு, சந்தியாவை அழைத்து சென்றார்.
இதற்கிடையில் சந்தியாவின் பெற்றோர், தனது மகளைக் காணவில்லை என்று பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதனை அறிந்த சந்தியா, தனது காதல் கணவருடன், பெற்றோரிடமிருந்து பாதுகாப்பு கோரி, முசிறி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் முத்தையன் இரு தரப்பு பெற்றோர்களை வரவழைத்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.