மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கைது செய்ய ப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்
திருப்பூரில் ஓட்டல்கள், பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை
பதிவு: டிசம்பர் 30, 2021 15:54 IST
கோப்புபடம்
திருப்பூர்:
தமிழகத்தில் கொரோனாபரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ்பரவலை தடுக்கவும் தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை அமல்படுத்தி உள்ளது.
மேலும் பண்டிகை காலங்களில் கொரோனாதொற்று அதிகரிக்க கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும், நாளை(31ந் தேதி)மக்கள் வீடுகளிலேயேஅவரவர் குடும்பத்தினருடன் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் பிறருக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வழிபாட்டு தலங்களில் தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்ட கொரோனா நடத்தை விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும், புத்தாண்டு தினத்தில் பொது இடங்களிலும், சாலை ஓரங்களிலும் கூட்டம் கூடுவதையும், இரு சக்கர வாகனங்களில் சுற்றுவதையும் தவிர்க்க வேண்டும்.
மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்ட கூடாது நாளை இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபடுவார்கள். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கைது செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யவும் போலீசார் நடவடிக்கைஎடுத்துள்ளனர்
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவின் பேரில் 2 துணை கமிஷனர்கள், 5 உதவி கமிஷனர்கள், 12 இன்ஸ்பெக்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
திருப்பூரில் முக்கிய சாலைகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். மேலும் மாநகரம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் தடை ஏற்படுத்தி அதிக வேகமாகவும், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதோடு வாகனங்களையும் பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திருப்பூரில் உள்ள ஓட்டல்கள், தியேட்டர்கள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்ப ட்டுள்ளது. மேலும் 22 ரோந்து வாகனங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
இதேபோல் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின் பேரில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரம் போலீசார்தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.
Related Tags :