உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பொங்கல் பண்டிகையையொட்டி திருப்பூர் மாவட்டத்துக்கு 5.38 லட்சம் வேஷ்டி - சேலைகள் ஒதுக்கீடு

Published On 2021-12-30 10:09 GMT   |   Update On 2021-12-30 10:09 GMT
கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தியான வேஷ்டி மற்றும் சேலைகள் தாலுகா வாரியாக வினியோகம் செய்யும் பணி தொடங்கி உள்ளது.
திருப்பூர்:

தமிழக அரசு சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது இலவச வேஷ்டி, சேலை வழங்கப்படுகிறது. நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு ஆர்டர் கொடுத்து அதன்மூலம் இலவச வேஷ்டி மற்றும் சேலைகள் உற்பத்தி செய்து பெறப்படுகின்றன.

கைத்தறி துணி நூல் துறை சார்பில்  விசைத்தறி நெசவாளர் சங்கங்களுக்கு ஆர்டர் வழங்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம், மாவட்டத்தில் வழங்க வேண்டிய வேஷ்டி, சேலைகளை வழங்க வேண்டுமென கோரப்பட்டது. 

அதிலிருந்து 50 ஆயிரம் வேஷ்டி மற்றும் சேலைகள் குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாவுக்கு 5 லட்சத்து 38 ஆயிரத்து 590 சேலை, 5 லட்சத்து 38 ஆயிரத்து 744 வேஷ்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தியான வேஷ்டி மற்றும் சேலைகள் தாலுகா வாரியாக வினியோகம் செய்யும் பணி தொடங்கி உள்ளது. 

தாராபுரம் - 81,627, காங்கயம் - 71,885, திருப்பூர் வடக்கு - 69,724, உடுமலை - 66,064, திருப்பூர் தெற்கு - 61,518, அவிநாசி - 66, 212, பல்லடம் -58,547, மடத்துக்குளம் - 35,391, ஊத்துக்குளி - 27,776 என 5 லட்சத்து 38 ஆயிரத்து 591 பயனாளிகளுக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்க ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில்:

மாவட்டத்துக்கு 5 லட்சத்து  88 ஆயிரத்து 983 பயனாளிகளுக்கு வேஷ்டி, சேலை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. மாவட்டத்துக்கு 5.35 லட்சம் பேருக்கு வேஷ்டி மற்றும் சேலை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இதுவரை 2.38 லட்சம் வேட்டி, சேலைகள் வந்துள்ளன. மீதியுள்ள வேட்டி, சேலை வாராவாரம் வந்து கொண்டிருக்கின்றன. அரசு அறிவித்த பிறகு வினியோகம் தொடங்கும் என்றனர்.
Tags:    

Similar News