உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

தென்னை மரங்களில் நோய் தடுப்பு பரிந்துரை - விவசாயிகள் வலியுறுத்தல்

Published On 2021-12-30 09:01 GMT   |   Update On 2021-12-30 09:01 GMT
தொடர் மழை காரணமாக, தென்னை மரங்களில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
உடுமலை:

உடுமலை சுற்றுப்பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. வழக்கமாக பருவமழைக்குப் பிறகு காய்ப்புத்திறனை மேம்படுத்த தென்னை மரங்களுக்கு, உரமிடுவது வழக்கம். நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்து அதிக நாட்கள் நீடித்தது. 

இதனால் விளைநிலங்களில் தண்ணீர் அதிக அளவு தேங்கி தென்னை மரங்களில் குரும்பை உதிர்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டது. மழை இடைவெளி விட்டதும் மரங்களுக்கு உரமிடுதல் பணி தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக தொழு உரம் இட ஆர்வம் காட்டுகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:

தொடர் மழை காரணமாக தென்னை மரங்களில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பருவமழை சீசனுக்குப் பிறகு உரம் மற்றும் நோய்த்தடுப்பு பரிந்துரைகளை வேளாண்துறையினர் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.
Tags:    

Similar News